கொங்கு குடும்ப விழா 2018 - விழா மலர் படைப்புகள்
உங்கள் அனைவரையும் மகிழ்விக்க இயல், இசை, நாடகம் என பல கோலாகலங்களை முனைப்புடன் உலகெங்கும் உள்ள நம் சொந்தங்கள் தயார் செய்து வருகிறார்கள். நாம் விழாவில் எடுக்கும் நிழற்படங்களும், காணொளிகளும் அந்த விழா குறித்த நம் நினைவுகளை காலங்கள் கடந்தும் நினைவூட்டும் என்றாலும் நம் மொழித்திறனை, ஆற்றலை சொற்களால் நினைவூட்டவல்லது நம் கைவண்ணங்களில் மலர்ந்த ‘விழா மலர்’. நம் நினைவடுக்கில் மட்டுமல்லாது நம் புத்தக அடுக்கிலும் நம் பெருமை பேசும், அலங்கரிக்கும். நம் பன்முகத் தன்மையை வெளிக்கொணர நமக்கெனவே உருவாக்கப்பட்ட வாய்ப்பு ‘விழா மலர்’ என்று சொன்னால் மிகையாகாது.
நம்மில் பலர் புலவராய், ஓவியராய், கவிஞராய், சமையல் கலை வல்லுனராய், தொழில் அதிபராய் பற்பல திறமைகளை கொண்டிருக்கிறோம். உங்கள் திறமைகளை உலகிற்கு பறைசாற்ற இந்த விழா மலர் ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறது. தங்கள் படைப்புகள் எதுவாகினும் எந்த வடிவில் இருந்தாலும் எங்களுக்கு விரைவாக அனுப்புங்கள். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி முப்பத்து இரண்டடி பாயும் என்பது போல் நமது பிள்ளைகள் நம்மிலும் ஆற்றல் வாய்ந்தவர்கள். நம் செல்வங்கள் பேசுவதோடு அல்லாமல் தமிழ் எழுதுவதிலும் வல்லவர்கள் அவர்கள் படைப்புகள் தமிழில் இருந்தால் கூடுதல் சிறப்பு. அவர்களது எழுத்துச் சரளம் ஆங்கிலத்தில் எனின் கவலை இல்லை, அவர்களுக்கும் இங்கே வாய்ப்பளிப்போம். உங்களுக்கு ஓவியம் பிடிக்குமா, சமையலா? கவிதை எழுதுவீர்களா, கட்டுரையா? நம் ஊர் சொல்லாடல்கள் பல அறிந்தவரா? விடுகதைகள், கோலங்கள் இதில் ஆர்வமா உங்களுக்கு? உங்கள் படைப்புகள் எதுவாயினும் எங்களுக்கு souvenir.kongudc.reunion@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடிக்’ கொண்டிருக்கும் நம்மில் பலர் தொழில் முனைவோரும் கூட, உங்கள் வர்த்தக விளம்பரங்கள் உலகெங்கும் உள்ள நம் சொந்தங்களுக்கு சென்றடைய வேண்டுமா? உங்கள் விளம்பரங்கள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்றும், இன்ன விவரங்களையும் souvenir.kongudc.reunion@gmail.com அனுப்புங்கள் நம் விழா மலரில் பதிந்திடுவோம்.
உங்கள் படைப்புகளை souvenir.kongudc.reunion@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
விளம்பர கட்டண விவரங்கள் அட்டவணையில்..
தங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, சந்தேகங்களோ இருப்பின் தொடர்புக்கு
மஞ்சு அய்யம்பாளையம் - manju.ae@gmail.com - 703.371.9458
மோகன் சுந்தரம் - mohan96@gmail.com - 703.608.8979