Kongu DC is a registered, non-profit, tax-exempt 501(c)(3) organization. Tax ID#82-2504739.      Phone: 703.594.6350 kongudc.reunion2018@gmail.com

கொங்கு குடும்ப விழா 2018 நிகழ்ச்சி பதிவு

நம் கொங்கு குடும்ப விழா 2018, வரும் செப் 1, 2 தேதிகளில் வாஷிங்டன் டி. சி பகுதியில் அமைந்துள்ள ஹில்டன் பெர்பாமன்ஸ் சென்டர்(Hylton Performance Center) அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது என்பதை அறிவீர்கள் . அதுசமயம் பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் நீங்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவேண்டும் என்பது நமது விழாக் குழுவின் விருப்பம். நீங்கள் உங்கள் திறன்களை அரங்கேற்ற விரும்பினால் கிழ்கண்ட வலை இணைப்பில் உடனே நிகழ்ச்சியைப் பதிவு செய்யுங்கள். பதிவுக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 12, 2018 ஞாயிற்றுக்கிழமை.

நிகழ்ச்சி பற்றி கவனிக்கவேண்டிய குறிப்புகள் :

1. அனைத்து நிகழ்ச்சிகளும் குழு நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும்; நேரம் கருதி தனிநபர் நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகிறது

2. எந்த நிகழ்ச்சியும் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

3. நிகழ்ச்சியில் அரசியல் சார்ந்த கருத்துக்களோ, மற்றவர் மனம் புண்படும்படியான வசனங்களோ இடம்பெறக் கூடாது.

4. நிகழ்ச்சி பற்றி குறிப்புக்கள் / வீடியோ பதிவுகள் திட்டமிடலுக்காக முன்னதாகவே அனுப்ப வேண்டியிருக்கும்

5. நிகழ்ச்சிகள் இயல் இசை நாடக வடிவில் இருப்பது நலம்.

6. இயன்றவரை நிகழ்ச்சிகள் நம் கொங்கு / தமிழ் கலாச்சாரம் சார்ந்ததாக இருப்பது சிறப்பு

7. இது ஒரு கொண்டாட்ட விழா என்பதால் சோகப் பாடல்களைத் தவிர்ப்பது நல்லது

8. மேலே குறிப்பிடப்படாத பிற நிகழ்ச்சிகளை நீங்கள் வழங்க விரும்பினால் எங்களை show.kongudc.reunion2018@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்

9. விழா அரங்கம் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பான நாடக அரங்கம். வசதிகளை முழுதும் பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்குவதே நமது நோக்கம். எனவே நேர்த்தியான திட்டமிடல் அவசியமாகிறது, அதற்காக உங்கள் முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

 

நிகழ்ச்சி வடிவங்கள்:

  • நடனம் / நாட்டியம்
  • பாடல் - இசை நிகழ்ச்சி
  • குறு நாடகம் (10-15 நிமிடங்களுக்கு மிகாமல்)
  • நகைச்சுவை நிகழ்ச்சி

பதிவுக்கான கடைசி நாள்   ஆகஸ்ட்  12, 2018 ஞாயிற்றுக்கிழமை